NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Disney +Hotstarஐ விலை பேசும் முகேஷ் அம்பானியின் “Reliance Industries”

முகேஷ் அம்பானியின் “Reliance Industries” நிறுவனம், Disney +Hotstarஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்பானி குழுமத்தை பொறுத்தவரை எந்த துறையில் இறங்கினாலும் அதகளம்தான். அதிலும் தம்பி அனில் அம்பானி பின்வாங்கிய பிறகு, அம்பானி சாம்ராஜ்யம் என்றாலே அது முகேஷ் அம்பானி என்றாகிப் போனது.

பல்வேறு புதிய துறைகளில் காலடி வைப்பதோடு, ஏற்கெனவே ராஜபாட்டையில் இருக்கும் துறைகளில், புதிய நிறுவனங்களை வளைத்துப் போடுவதிலும் ஆர்வமாக இருக்கிறார் முகேஷ் அம்பானி.

இந்த வரிசையில் தற்போது சர்வதேச பிரபல OTT தளமான Disney +Hotstar தளத்தை, வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை Walt Disney நிறுவனத்துடன் முகேஷ் அம்பானியின் “Reliance Industries” நிறுவனம் தொடங்கியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles