NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

GOAT படக்குழுவினர் வெளியிட்ட மற்றுமொரு போஸ்டர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் Goat. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இம்மாதம் முதல், Goat திரைப்படம் தொடர்பாக புதுப்புது அப்டேட் வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். அத்தோடு இத்திரைப்படத்தின் முதல் பாடலும் இம்மாதம் வெளியாகலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் பிரபுதேவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் GOAT படக்குழுவினர் மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

Share:

Related Articles