NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC கிரிக்கெட் தொடரை நேரில் கண்டுகழிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்

ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண Super Star ரஜினிகாந்துக்கு BCCI தலைமை செயலாளர் ஜெய் ஷா ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கியுள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் Super Star ஆக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தை ஜெய்ஷா சந்தித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் Octobar 5ம் திகதி இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடர் November 19ம் திகதி வரை இந்தியாவில் உள்ள பத்து நகரங்களில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தை BCCI தலைமை செயலாளர் ஜெய்ஷா நேரில் சந்தித்திருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து எந்தவித பணமும் செலுத்தாமல் அனைத்து போட்டிகளையும் பார்க்கும் வசதி உடைய கோல்டன் டிக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நினைத்தால் இந்த உலகக் கோப்பை தொடர் நடக்கும் எந்த மைதானத்திற்கு சென்றும் இலவசமாக பார்க்கலாம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles