NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

J.பேபி படத்தின் 2-வது சிங்கிள் அப்டேட்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தின் 2-வது சிங்கிள் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.

இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். இது சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படமாகும். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் 2-வது சிங்கில் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது. வருகிற மார்ச் 8ம் திகதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles