NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

July 6 வருகிறது “சலார்” பட டீசர்

KGF திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வருகிற September 28ம் திகதி “சலார்”படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 (இந்திய பெறுமதி) அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன்படி இப்படத்தின் டீசர் July 6ம் திகதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தற்போது அறிவித்துள்ளது.

“சலார் “பட டீசரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் இதன் டீசர் விடியற்காலையில் வெளியாவதால் அதிர்ச்சியில் உள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles