NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

100 கோடி வசூலில் இணைந்த தனுஷின் வாத்தி

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ’வாத்தி’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூபாய் 8 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், 3 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், ஒரே வாரத்தில் 75 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share:

Related Articles