NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“OMG 2” படத்திற்கு “A” சான்றிதழால் வந்த சிக்கல்

“அமித் ராய்” இயக்கத்தில் அக்‌ஷய் குமார், பங்கஜ் திரிபாதி, உட்பட பலர் நடித்துள்ள ஹிந்திப் படம் தான் “OMG 2”

இதில், சிவபெருமானின் தூதுவராக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். “OMG 2″ இது பாலியல் குறித்த விஷயங்களைப் போதிப்பதால், தணிக்கைக் குழு”A” சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனால் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்க அனுமதியில்லை. கடந்த 11 திகதி வெளியான இந்தப் படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இதில் நடித்துள்ள ஆருஷ் வர்மாவுக்கு 16 வயது என்பதால், தான் நடித்த படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்.

இதுபற்றி அவர் உறவினர்கள் கூறும்போது, “நாங்கள் குடும்பத்துடன் ஆருஷின் படத்தைப் பார்க்கச் சென்றோம். ஆனால் அவரால், தான் நடித்த படத்தை பார்க்க முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது” என்றனர்.

Share:

Related Articles