NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் ‘ஆடுஜீவிதம்’

ஆ|டு ஜீவிதம் படம் வரும் May மாதம் OTTயில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.  மலையாள எழுத்தாளர் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ப்ளஸ்ஸி கூறுகையில், “இப்படத்தின் படத்தொகுப்பு முடிந்து பார்க்கும்போது, அதன் நீளம் 3 மணி நேரம் 30 நிமிடங்களாக இருந்தது.

பின்னர் இவ்வளவு நேரம் வேண்டாம் என முடிவெடுத்து, 30 நிமிட காட்சிகளை நீக்கிவிட்டோம். ஆனால், படம் OTTயில் வெளியாகும்போது பார்வையாளர்கள் அந்த 30 நிமிட காட்சிகளை காணும் வகையில், அவையும் சேர்த்து OTT யில் வெளியிடப்படும்” என்றார்.

இப்படத்தின் OTT உரிமையை Disney Plus Hot Star OTT நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Share:

Related Articles