புதிய படங்கள் தியேட்டருக்கு வரும் திகதியையே தற்போது முடிவு செய்யும் இடத்துக்கு OTT நிறுவனங்கள் வந்து விட்டதாக பத்திரிகையாளர் பிஸ்மி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
புதிய படங்களை 4 வாரத்துக்குள் OTTயில் வெளியிடுவோம் என்கிற ரூல்ஸ் எல்லாம் மாறிG.V பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல், டியர் படங்கள் 2 வாரங்களில் எல்லாம் OTTயில் வெளியாகி வரும் சூழல் தற்போது வெளியாகி விட்டது.
பல தயாரிப்பாளர்களில் பெரிய OTT நிறுவனங்களில் படத்தை சேல் பண்ணி தருகிறேன் என இடைத்தரகர்களும் அதிகம் இந்த பிசினஸில் நுழைந்து விட்டதால் பல குழப்பங்கள் தமிழ் சினிமாவில் எழுந்திருப்பதாக கூறுகின்றனர்.
பல பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை நிறுத்தி விட்டு மாசத்துக்கு ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக OTT நிறுவனங்கள் தான் தற்போது RELEASE திகதியில் இருந்து அனைத்து விஷயங்களையும் முடிவு செய்வதாக கூறியுள்ளார். இதனால்,
கலைஞர்களின் திறமை, பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் கடன் சுமையில் தவிப்பது போன்றவை அரங்கேறி வருகிறது என பிஸ்மி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.