கொரோனாவுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டன. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத சினிமா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள்.
விஜய்யின் நடிப்பில் மிகவும் பேசப்பட்ட படங்களில் ஒன்றான வாரிசு இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம், பாலைய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி மற்றும் மலையாளத் திரைப்படமான தங்கம் இந்த வாரம் ஒடிடியில் வெளியாக உள்ளது.
வாரிசு

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. இருமொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் பிப்ரவரி 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.
இருதுருவம் 2

2019ம் ஆண்டு வெளியான வலைத் தொடர் இருதுருவம். ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருதுருவம் 2 புதிய தொடர் பிப்ரவரி 24 முதல் Sony LIV வெளியாக உள்ளது.
வீரசிம்ஹா ரெட்டி

கோபிசந்த் மலினினி இயக்கத்தில், தமன் இசையில், புஷ்பா தயாரிப்பாளர் மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வீரசிம்ஹா ரெட்டி. இந்த படத்தில், ஸ்ருதிஹாசன், வரலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வீரசிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இதில், வீரசிம்ஹா ரெட்டி டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் பிப்ரவரி 23ந் தேதி வெளியாகி உள்ளது.
நண்பகல் நேரத்து மயக்கம்

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மெகா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் கடந்த மாதம் 19ந் தேதி வெளியானத் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம். இப்படத்தில் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்ஃபிளிக்ஸில் பிப்ரவரி 23ந் தேதி வெளியானது.