NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“SK 21” படப்பிடிப்பின் புதிய தகவல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் படத்தை தொடர்ந்து தற்போது “SK21″படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின்”Raj Kamal Filims Internationl”நிறுவனம் தயாரிக்க, G.V பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

“SK 21” படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles