NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Star Sportsல் இருந்து லிலகிவிட்டாரா தொகுப்பாளினி பாவனா

‘Raj TVல் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய பாவனா அதன்பிறகு சென்றது ‘Vijay TV’

அங்கு ‘Super Singer’, ‘Jodi Number1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவருக்கு மிகவும் பிரபலம் கிடைத்த நிகழ்ச்சி என்றால் ‘Jodi Number 1’ நிகழ்ச்சியில் 6வது சீசன் தான்.

கடந்த 2017ம் ஆண்டு Vijay TVல் இருந்து வெளியேறினார்.

பின் திருமணம் செய்த பாவனாStar Sports ல் ஒளிபரப்பாகும் IPL கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். 

6 ஆண்டுகளாக ஆண்டுகளாக Vijay TV பக்கம் வராத பாவனா தற்போது மீண்டும் இந்த தொலைக்காட்சி பக்கம் வந்துள்ளார்.

Super Singer Junior நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாவில், 6 வருஷம் ஆனது, உங்கள் கடிகாரத்தை ரீவைண்டு செய்ய வேண்டிய நேரம் இது, இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பாருங்கள். அதில் 3 எபிசோடுக்கு மட்டும் கெஸ்ட் ஹோஸ்ட் ஆக நான் மீண்டும் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வந்த சூப்பர் சிங்கர் குழுவுக்கு நன்றி, இந்த மேடை நிரந்தரம் அல்ல தற்காலிகமானது தான். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தொடங்கி உள்ள கபடி தான் என்னுடைய முக்கியமான வேலை என பதிவு செய்துள்ளார்.

Share:

Related Articles