NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

THE KERALA STORY திரைப்படம் படைத்த சாதனை

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம்தான் ‘THE KERALA STORY’

இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது,
என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது.

இந்நிலையில்‘THE KERALA STORY’ வசூல் குறித்த அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தை தவிர்த்து ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களை மையப்படுத்தி வெளியான இந்த திரைப்படம் ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

Share:

Related Articles

Manjummal Boys May 3 OTTயில்