NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Topஇல் ஏறிப்போகும் சிறகடிக்க ஆசை சீரியல்!

விஜய் டிவியில் டாப்பில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் சொதப்ப அந்த இடத்தை பல மாதங்களாக பிடித்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

இப்போது கதையில் மனோஜ், ஜீவாவிடம் வாங்கிய பணத்தில் தான் கடையை திறந்தார் என்ற உண்மை குடும்பத்தினருக்கு தெரிய வந்துவிட்டது. 

இதனால் விஜயா, ரோஹினி மீது செம கோபத்தில் உள்ளார், மனோஜிடமும் அவருடன் பேச கூடாது என்கிறார்.

விஜயா-ரோஹினி பிரச்சனை எப்படி முடியப்போகிறது என்பது தெரியவில்லை, இன்றைய எபிசோடும் சாதாரணமாக முடிந்துவிட்டது. 

தற்போது நாளைய எபிசோடிற்கான புரொமோவில்,  முத்து மனோஜிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் கூறுகிறார். 

புரொமோவில், ஜட்ச்  தீர்ப்பு சரியாக கூறவில்லை என்பதால் நான் ஒரு தீர்ப்பு கூறுகிறேன். அந்த கடை அவனது மாமனார் வீட்டு பணத்தில் வாங்கவில்லை அப்பாவின் பணம்.

எனவே அந்த கடையை அப்பா பெயருக்கு மாற்ற வேண்டும், அவர் தான் ஓனர் என்கிறார். இதைக்கேட்டு மனோஜ் மற்றும் ரோஹினி இருவரும் ஷாக் ஆகிறார்கள்.

Share:

Related Articles