NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Y Plus” பாதுகாப்பு ஏன்? – நடிகை “கங்கனா ரனாவத்” விளக்கம்

நடிகை “கங்கனா ரனாவத்” தமிழில், இப்போது ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கங்கனா, இரண்டு ஹிந்தி நடிகர்கள் மீது, போலி ID மூலம் தன்னைப் பின் தொடர்வதாகவும் ஒருவர் தன்னை Dating செய்யுமாறு கெஞ்சினார் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு இவர், மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனால் அவருக்கும் M.P சஞ்சய் ராவத்தும் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு”Y Plus”பாதுகாப்பு வழங்கியது.

இதற்குப் பதிலளித்துள்ள கங்கனா, “நான் பொலிவுட் நட்சத்திரம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அக்கறையுள்ள குடிமகள்.

மகாராஷ்டிராவில் அரசியல் வன்மத்துக்கு நான் இலக்கானேன். நான் “Dukte” கும்பலைப் பற்றியும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளேன்.

நான் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். எனது அடுத்த படமான “Emergency”யில் “Operation Bluestar” பற்றி பேசுகிறேன். இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, அதனால் பாதுகாப்பு கோரினேன். என்று பதிவிட்டுள்ளார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles