NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Zee 5 OTT தளத்தில் “Haddi”

புதுமுக இயக்குநர் “அக்‌ஷத் அஜய் சர்மா” இயக்கியுள்ள படம் “Haddi”. இதில் நவாசுத்தீன் சித்திக் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் நேரடியாக Zee 5 OTT தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் அக்‌ஷத் அஜய் சர்மா கூறும்போது,

“இது சமூகத்தின் இரக்கமற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது. இப்படத்தை உருவாக்கவும், கதாபாத்திரங்களை வடிவமைக்கவும் எனக்கு நிறைய நாட்கள் ஆனது. “Haddi” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles