NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக பட வாய்ப்புகளும் வசந்த் ரவி

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான வசந்த் ரவி வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரின் அறிமுக படமான தரமணி பலரின் பாராட்டை பெற்றது.

அப்படத்தை தொடர்ந்து வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் யார் இந்த வசந்த் ரவி என்ற கேள்வியையும் எழ வைத்தது.

இப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் அர்ஜூன் முத்துவேல் பாண்டியன் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் வசந்த் ரவி. வெப்பன் எனும் படத்தில் சத்யராஜுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அதிக அளவு துப்பாக்கிகளை கையாளும் சண்டைக் காட்சிகளில் இவர் நடித்துள்ளாராம். இதற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய இயக்குநருடன் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம் வசந்த ரவி.

Share:

Related Articles