NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனிமல் – எதிர்மறை விமர்சனங்களை தாண்டி எகிறும் வசூல்

கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குநராக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான “அனிமல்” உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.

மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.

“நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை.

எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?” என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் “அனிமல்” திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles