NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கதாநாயகனாக அறிமுகமாகும் சஞ்சய் – கதாநாயகி யார் தெரியுமா?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் நிலையில், இவருடைய மகன் சஞ்சய் சினிமாவில் காலடி எடுத்துவைக்கவுள்ளார்.

சமீபத்தில் கூட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார்.

இயக்குநராக வேண்டும் என முயற்சி செய்து வரும் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. இதை விஜய் கூட பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை தனது மகளுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைக்க ஆசை என நடிகை தேவயானியின் கணவரும், பிரபல இயக்குநருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

இதில் மகள் இனியா என்பவர் சமீபத்தில் தான் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இப்படியொரு நிலையில் இயக்குநர் ராஜகுமாரன் ‘நீ வருவாய்’ என படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளாராம்.

இப்படத்தின் மூலம் தனது மகள் இனியாவை கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ள ராஜகுமாரன், கதாநாயகனாக விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு ‘நீ வருவாய்’ என படத்தில் தேவயானியுடன் இணைந்து அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருந்தனர். ஆனால், சில காரணங்களால் விஜய் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதால் அந்த ரோலில் பார்த்திபன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles