NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடா குடிமகன் ஆனது ஏன்? நடிகர் அக்‌ஷய் குமார்

ANI செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த அக்‌ஷய் குமார்  தான் கனடா குடிமகன் ஆனது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: என்னுடைய படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் நான் கனடியனாக மாறினேன். ஒரு கட்டத்தில் தொடர்ந்து 13 அல்லது 14படங்கள் தோல்வியைத் தழுவின.

அந்த தருணத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் கனடாவில் இருந்தார். என்னை வந்துவிடுமாறு கூறிய அவர், அங்கு இருவரும் சேர்ந்து கார்கோ தொழில் செய்யலாம் என்று யோசனை தெரிவித்தார்.

என் படமும் சரியாக போகாததால் நான் அதற்கு சம்மதித்தேன். நான் டோரென்டோவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது எனக்கு கனடா Passport கிடைத்தது. அதற்கு இடையில் என்னுடைய இரண்டு படங்கள் Relese ஆகி, Super Hit ஆகிவிட்டன.

Share:

Related Articles