NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலன் அர்ஜூன் கபூரின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மலைகா – இரசிகர்கள் அதிர்ச்சி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொலிவுட் பிரபலங்களான மலைகா அரோராவும் அர்ஜுன் கபூரும் காதலித்து வரும் நிலையில், மலைகா அரோரா, தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஆவார்.

பொலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ்களுள் ஒருவரான இவர், 2012ஆம் ஆண்டு திரையுலகிற்கு வந்து, பிரபல நடிகைகளான பரினிதி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், கரீனா கபூர் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் இவரது உறவினர். அர்ஜுன் கபூர், பிரபல நடிகையும் மாடலுமான மலைகா அரோராவை காதலித்து வருகிறார்.

49 வயது மலைகா அரோராவுக்கும், 37 வயதான அர்ஜுன் கபூரும் சுமார் 5 வருடங்களாக டேட்டிங் செய்து வருகின்றனர். மொடலிங் துறையில் பிரபலமாக விளங்கும் மலைகா அரோரா, அவரது வாழ்க்கையில் நடைபெறும் பல்வேறு விஷயங்களை சமூக வலைதளம் மூலம் இரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

அர்ஜுன் கபூருடன் உள்ள புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வரும் நிலையில், நேற்று தனது ஸ்டோரி பக்கத்தில் மலைகா ஒரு புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் அர்ஜுன் கபூரின் பிறப்புறுப்பு மட்டும் தலையணை வைத்து மூடப்பட்டுள்ளது. உடலில் வேறு துணி கூட இல்லாமல் அர்ஜுன் கபூர் படுத்திருக்கும் புகைப்படத்தை மலைகா வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘என் சோம்பேறி பையன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இரசிகர்கள் மலைகாவை விமர்சித்துக்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles