பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயனுடன் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தந்திருந்தார். மேலும் திரையுலகை நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், நயன்தாரா, சூர்யா, அட்லீ, ரன்வீர் சிங், மோகன்லால், சிரஞ்சீவி என பலரும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.