கடந்த 1997ம் ஆண்டு தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான தொடர் ‘சக்திமான்’. அப்போதைய சிறுவர்களிடையே மிகவும் பிரபலமடைந்த இந்தத் தொடர் கிட்டத்தட்ட 2005ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டடது.
இதில் சக்திமானாக முகேஷ் கண்ணா நடித்திருந்தார். இந்தத் தொடரை Super Hero திரைப்படமாக உருவாக்க இருப்பதாக Sony நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.
ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய முகேஷ் கண்ணா Bollywoodன் முன்னணி நடிகர் ஒருவர் சக்திமானாக நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் அண்மையில் தனது X பக்கத்தில் Live மூலம் ரசிகர்களிடம் உரையாடினார்.
அப்போது Bollywood நடிகர் ரன்வீர் சிங் அதில்”Live Prime Mumbai” என்று Comment செய்திருந்தார். ரன்வீருக்கு பதிலளித்த டொவினோ, ’மின்னல் முரளி’ இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதை உறுதி செய்தார்.
ஆனால் அது என்ன படம் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ‘சக்திமான்’ படத்தை பேசில் ஜோசப் இயக்க அதில் ரன்வீர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிவிட்டது.