NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூதாட்ட விளையாட்டு குறித்த விளம்பரங்களை வெளியிடும் OTT தளங்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் சூதாட்டம் மற்றும் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து சமூக வலை பக்கங்கள் மற்றும் OTT தளங்களில் சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களை தற்போது வரை ஒளிபரப்பி வருகின்றனர்.

அதாவது Netfilix , Hotstar மற்றும் Amazon Primce Vedio போன்ற OTT தளங்கள் தற்போது வரை சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகள் குறித்தான விளம்பரங்களை ஒளிபரப்பி வரும் நிலையில் இந்திய அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களை சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுக்களுக்கு தூண்டும் வகையில் எந்தவித விளம்பரங்களையும் ஒளிபரப்ப வேண்டாம் என Netfilix, Hotstar மற்றும் Amazon Prime Vedio உள்ளிட்ட OTT தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையும் தாண்டி தேவையற்ற விளம்பரங்களை ஒளிபரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 18+ உள்ளடக்கத்தை தவிர்க்கும் படியும் சமூக வலைப்பக்கங்கள் மற்றும் OTT தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Share:

Related Articles