நடிகை ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் பிரபல்யமாக இருக்கிறார். மேலும் ரஷ்மிகா தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்திவிட்டதாகவும் செய்தி பரவியது. அது உண்மை இல்லை என ராஷ்மிகா விளக்கம் கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் ராஷ்மிகா மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் கிளம்பிய நிலையில் சற்று நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மும்பையிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.
அப்போது அதிகம் Turbulence ஏற்பட்டதாகவும், அதை எப்படி சமாளித்து சாவில் இருந்து தப்பினார் என்ற போட்டோவை ராஷ்மிகா வெளியிட்டு இருக்கிறார். ராஷ்மிகா உடன் நடிகை ஷரத்தா தாஸ் பயணித்ததும் குறிப்பிடத்தக்கது.