NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளுக்கு 2 வது திருமணம் – சங்கர்

பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையானார்.இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.

சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.

இந்நிலையில் வருகிற 15- ம் திகதி ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடை பெற உள்ளது. இதற்கான வேலைகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவை தடபுடலாக நடத்த ஷங்கர் திட்டமிட்டு உள்ளார்.

Share:

Related Articles