NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஷ்மிகாவை அவமானப்படுத்திய ஷ்ரத்தா கபூர்?

தென்னிந்திய சினிமாவில் இருந்து பொலிலிவுட் திரையுலகிற்கு செல்லும் பல நட்சத்திரங்கள் சில ஆண்டுகளிலேயே மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கு திரும்பி விடுவார்கள். 

ஏர்.ஆர்.ரஹ்மான், மணி ரத்னம், இளையராஜா, கமல் ஹாசன் என பலரையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி பொலிவுட்டில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது Pan இந்தியா கலாசாரம் வந்தபின், அங்கிருந்து ஒரு நடிகர் தென்னிந்திய படங்களில் நடிப்பதும், தென்னிந்திய சினிமாவில் இருந்து ஒரு நடிகர் பொலிவுட் படங்களில் நடிப்பதும் சகஜம் ஆகிவிட்டது.

சமீபத்தில் கூட தமிழில் இருந்து பொலிவுட் பக்கம் போன இயக்குனர் அட்லீ ஜவான் எனும் மாபெரும் வெற்றி படத்தை பொலிவுட் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா விழாவிற்கு வரும் போது அவர் எதிரே பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் வந்தார். உடனடியாக ராஷ்மிகா அவரை பார்த்து சிரித்தாலும், ஷ்ரத்தா கபூர் நடிகை ராஷ்மிகாவை கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தும் படி கடுப்பான முகத்துடன் ராஷ்மிகாவை கடந்து சென்றுவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ராஷ்மிகாவின் வளர்ச்சியை பொலிவுட் நடிகைகளால் ஏற்றுக்கொள்ள முடியாவில்லை. அது தான் இதற்கு காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles