NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லியோ படத்தை ஓவர் டேக் செய்த தக் லைஃப்.

நாயகன் படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல் ஹாசன், மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் தக் லைஃப்.இப்படத்தில் திரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி சில பிரச்சனைகளால் இருவரும் விலகிவிட்டனர். இவர்களுக்கு பதிலாக சிம்பு, அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஓவர்சீஸ் உரிமம் ரூபாய் 60 கோடி மேல் வியாபாரம் ஆகியுள்ளதாம். இதன் மூலம் விஜய்யின் லியோ படத்தின் ஓவர்சீஸ் ரெக்கார்ட்டை தக் லைஃப் படம் முந்திவிட்டதாக சொல்லப்படுகிறது.

Share:

Related Articles