NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் உருவாகும் “பீட்சா பாகம் 4”

“கார்த்திக் சுப்பராஜ்” இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “பீட்சா”.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் “பீட்சா 2” திரைப்படம் வெளியானது.

இதைத்தொடர்ந்து அஸ்வின் நடிப்பில் “பீட்சா 3” திரைப்படம் உருவானது.

இந்நிலையில், ‘பீட்சா’ திரைப்பட வரிசையில் நான்காம் பாகம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் (C.V குமார்) அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பீட்சா மூன்று பாகங்களின் வெற்றி, இப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் தொடர்ந்து அளித்து வருகிறது.

எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘பீட்சா’ நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றும் கூறினார்.

Share:

Related Articles