புதிய அரசாங்கத்துடன் அமைச்சுப் பதவிகளை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
தமிழ் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிலும் போட்டியிடுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.
அங்கு பேசிய சுமந்திரன் தமிழ்க் கூட்டமைப்பு என்ற வகையில் வடக்கு – கிழக்கில் போட்டியிடுவதற்குத் தேவையான வேட்புமனுக்கள் இன்னும் சில தினங்களில் தயாரிக்கப்படும் என்று கூறிய அவர், புதிய இளைஞர்களை நியமிப்பதை உறுதி செய்வோம் என்றார்.