NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரம் குறைந்த மருந்துகள் எது என்பதற்கு வரைவிலக்கணம் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு… !

இந்தியாவின் கடனுதவி இல்லாத காலத்திலும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80 வீத மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன இது தொடர்பில் வினவிய போது, அதிகாரிகள் இதனைத் தெரிவித்ததுடன் அண்மைக்காலமாக இந்தியக் கடனுதவியின் கீழ் கொண்டுவரப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், மருந்துகளை கொண்டுவருவதற்கு உரிய பிரிவினர் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால், மருந்து கிடைக்காமல் மக்கள் உயிரிழப்பார்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,

பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, அந்த விடுதியில் இருந்த 12 நோயாளர்களுக்கு தற்போது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்தை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டில் ஒரு இலட்சத்து 67 ஆயிரம் பேர் இந்த மருந்தைப் பயன்படுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலைகளுக்காக இந்த மருந்துகள் 2 இலட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த மருந்து 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அNநேரம், தரக்குறைவான மருந்துகள் எது என்பதற்கு வரைவிலக்கணம் இல்லை என்றும், தரக்குறைவான மருந்து என்பதை தான் நிராகரிப்பதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles