இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.