நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 6 ரூபாவினால் குறைத்து 371 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அத்தோடு, சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 311 ரூபா என்ற விலையில் மாற்றமின்றி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 283 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.