அம்பாந்தோட்டை – வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும் அவரது நண்பரும் ஐஸ் போதைப்பொருளை பாவித்துக் கொண்டிருந்தபோது மாத்தறை தியகஹ பகுதியில் உள்ள கடையொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு ஊழல் தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வைத்தியரிடம் இருந்து 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் அவரது நண்பரிடம் இருந்து 2,100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இருவரும் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளதாகவும் சந்தேக நாபரான வைத்தியர் 2016 ஆம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.