கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் சமீப காலமாக நிலவி வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துவதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் கிரீசின் சில இடங்களில் அதிகபட்சமாக 40 பாகை செல்சியஸைத் தாண்டியை வெப்பநிலை பதிவாகியள்ளது.
இதனால் அங்குள்ள ரோட்ஸ் தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
எனவே, பாதுகாப்பு கருதி அங்கிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக சுமார் 100 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 500 வீரர்களை ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உறுப்பு நாடுகள் அங்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இத்தாலியிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ பரவலால் அங்குள்ள பலேர்மோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.