NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Animal” பட விமர்சனங்களுக்கு ரன்பீர் கபூர் பதில்

Bollywoodல் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது இயக்குநர் ‘சந்தீப் ரெட்டி வங்கா’ இயக்கத்தில் ‘Animal’ படத்தில் நடித்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் Animal பட விமர்சனங்களுக்கு நடிகர் ரன்பீர் கபூர் பதிலளித்துள்ளார்.

“சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்கம் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடல் தற்போது தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே நல்ல விஷயம். Animal படத்தால் இது நடந்துள்ளது.

ஏதாவது தவறு நடந்தால், அதை தவறு என்று சுட்டி காட்டி சமூகத்தில் உரையாடல் தொடங்காத வரை அதை நாம் உணரவே மாட்டோம், அந்த தவறைத்தான் Animal படத்தில் நாங்கள் காட்டியுள்ளோம்’ என்று ரன்பீர் கபூர் தெரிவித்தார்.

Share:

Related Articles