CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சில விடயங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.
CLEAN SRI LANKA வேலைத்திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மத நல்லிணக்க அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர்; வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க, இந்த விடயம் தொடர்பில் உரிய வகையில் ஆராய்ந்து தீர்வினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.