கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ லீக்ஸ் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 100 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ பீட்ரூட் 80 ரூபாவாகவும், ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாவாகவும் ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ இஞ்சி 800 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்திரிக்காய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாகவும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவாகவும் இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.