பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் 1,259 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்க பெற்றுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 123 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பான 13 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும், கிடைக்கப்பெற்றுள்ள 1,259 முறைப்பாடுகளில் 1,018 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.