NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்து கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. 

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என காவல்துறையினர் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்தனர். 

இதனைக் கருத்திற்கொண்ட நீதவான், இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மாலை ஆறு மணிவரை ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்குத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட 5 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Share:

Related Articles