NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது சம்பளம் பற்றி கூறிய ஹிந்தி நடிகை “ஊர்வசி ரவுதெலா”

ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா, தமிழில் Legend சரவணன் நடித்த ‘லெஜண்ட்’ படத்தில்கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்காக அவருக்கு சில கோடி சம்பளம் (இந்திய பெறுமதி) கொடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வரும் அவரிடம், செய்தியாளர் ஒருவர், ‘இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறீர்கள். ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி உயர்ந்தீர்கள்?’ என்று சமீபத்தில் கேட்டார்.

அதை ஏற்றுக்கொள்வது போல பதிலளித்த அவர், ‘இது நல்ல விஷயம். ஒவ்வொரு நடிகர், நடிகையரும் இப்படிப்பட்ட ஒரு நாளைக் காண ஆசைப்படுவார்கள்’ என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

சிலர், அப்படி என்றால், ஒரு மணி நேரத்தில் ரூ.60 கோடி (இந்திய பெறுமதி) சம்பாதிக்கிறார். இது எப்படி சாத்தியம்? பொய் சொல்வதற்கு அளவில்லையா? என்று அவரைகடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

‘ஊர்வசியை நான் பாராட்டுகிறேன். அவர் பொய் சொல்வதற்கு கவலைப்படுவதில்லை’ என்று சிலர் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன. நடிகை ஊர்வசி, தெலுங்கு படம் ஒன்றில், 3 நிமிடம் வரும் பாடலுக்கு ஆட ரூ.3 கோடி (இந்திய பெறுமதி) சம்பளம் கேட்டதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி இருந்தது.

Share:

Related Articles