NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ணத்திற்காக Doodle வெளியிட்ட Google !

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள இன்று (05) நிலையில் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர்கள் ஒருநாள் உலகக் கோப்பை நடாத்திவருகிறது.

இந்த போட்டியின் 13 ஆவது எடிஷன் இன்றுமுதல் நவம்பர் 19ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

ஏற்கெனவே வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து மூன்று முறை உலக கோப்பை போட்டியை இந்தியா நடத்தியுள்ளது.

இந்த முறை தன்னந்தனியாக இந்தியா மட்டும் நடத்துகிறது. மொத்தம் 48 நாள்கள் நடைபெறும் போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டியை சிறப்பிக்கும் வகையில் ‘டூடுல்’ எனப்படும் கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles