NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில்..

மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தனது வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், கங்கனா தனது அம்மாவிடம் ஆசி பெற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.மண்டி தொகுதியில் போட்டியிட்ட பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெற்றிக்கு மிக அருகிலுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை காட்டிலும் 73,625 வாக்குகள் முன்னிலையிலுள்ளார்.

ஹமிர்பூரில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், 1,71,348 தொகுதிகள் முன்னிலையிலுள்ளார்.

காங்ராவில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராஜிவ் பர்த்வாஜ் 2,45,987 வாக்குகள் முன்னிலையிலும் ஷிம்லாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுரேஷ் குமார் காஷ்யப் 89,660 வாக்குகள் முன்னிலையிலும் உள்ளதாகத் தேர்தல் ஆணையகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles