கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்திகரிக்கும் கருவிகள் (இரத்த கசிவு வடிகட்டி) இன்மையால் நூற்றுக்கணக்கான சிறுநீரக நோயாளர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலைமையால் கராப்பிட்டி வைத்தியசாலையின் கிளினிக்குகளுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக வந்து உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நூற்றுக்கணக்கான சிறுநீரக நோயாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
சில நோயாளிகளின் இரத்தத்தை ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும், சில நோயாளிகளின் இரத்தத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் சுத்தப்படுத்த வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.பணத்திற்காக கூட எந்த மருந்தகத்திலும் இந்த கருவிகள் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஹரஷனி உபேசேகரவிடம் கேட்டபோது, உபகரணப் பற்றாக்குறையால் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாத்திரமன்றி ஏனைய வைத்தியசாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் உபகரணப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.