NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதிர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2 ஆம் கட்டத்தின் கீழும், முதலாம் கட்டத்தின் கீழும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் – சீதாவாக்கை, பாதுக்கை களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, ஹொரணை, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தநுவர, அகலவத்தை பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹ_பிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தில் எல்ல, ஹாலிஎல, பசறை, காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, நியாகம களுத்துறை மாவடடத்தில்; பேருவளை கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles