NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

துல்ஹிரிய பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 40, 39 மற்றும் 13 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles