NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகளாவிய ரீதியில் 24 முதல் 31 கோடி பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவதாக ஐ.நா தெரிவிப்பு!

உலகளாவிய ரீதியில் உள்ள 8 பெண்களில் ஒருவர் 18 வயதை அடைவதற்கு முன்னர் பாலியல் வன்கொடுமைக்கு துன்புறுத்தலுக்கும் உள்ளாவதாக ஐ.நாவின் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து, ஐ.நா. இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகில் தற்போதுள்ள பெண்களில் 37 கோடி பேர் 8 இல் ஒருவர் பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

அவர்கள் உடல் ரீதியாக அல்லாது, இணையவழியில் 65 கோடி பெண்கள் 5 இல் ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி, சகாரா ஆப்பிரிக்காவில் 7.9 கோடி பெண்களும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7.5 கோடி பெண்களும், மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளைச் சேர்ந்த 7.3 கோடி பெண்களும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6.8 கோடி பெண்களும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளில் 4.5 கோடி பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் அரசியல் நிலைத்தன்மை அற்ற சூழலால் படைக்கப்பட்டுள்ள நாடுகளில் அதிக அளவிலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐநா அமைப்பின் அகதி முகாம் பகுதிகளில் தங்கியுள்ள 4 பெண்களில் ஒருவர் அங்கு வருவதற்கு முன் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, பாதிக்கப்படும் பெண்களில் 14 முதல் 17 வயதுடைய சிறுமிகளே அதிகம் எனவும், ஒருமுறை துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமிகளே மீண்டும் மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுவதால் அதன் மனரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்கம் அவர்களை விட்டு நீங்குவதே இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன அழுத்தம், மனச் சோர்வு, பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்கள் உள்ளிட்டவற்றால் அவதியுறும் இவர்கள், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுமிகள் மட்டுமல்லாது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 24 முதல் 31 கோடி பேர் 18 வயதுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles