NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விஐபி முனையத்திற்கு அருகில் விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இன்று காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் தண்ணீர் அருந்த ஓய்வு பகுதிக்குச் சென்ற போது அவரது துப்பாக்கி கீழே விழுந்து, தோட்டா வௌியானதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, துப்பாக்கியில் இருந்து வௌியான தோட்டா ​​அருகில் இருந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் தாக்கியிருந்தது.

Share:

Related Articles