NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவின் புதிய வரைபடம் : இந்தியாவுக்கு விளக்கம் !

இந்தியாவின் அருணாசல பிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைப்படத்தை சீனா வெளியிட்டுள்ளது.

சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கண்டனம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வாங் வென்பின்னிடம் நேற்று (30) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்,

சீனாவின் தேசிய வளத்துறை அமைச்சு 2023 ஆம் ஆண்டுக்கான புதிய வரைப்படத்தை வெளியிட்டது.

சீன இறையாண்மையை சட்டப்படி செயல்படுத்துவதில் இது ஒரு வழக்கமான நடைமுறைதான். இந்த விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் (இந்தியா) அமைதியாக இருப்பார்கள் என்றும் மிகைப்படுத்துவதை தவிர்ப்பார்கள் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles