NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீரற்ற காலநிலையால் பரவக்கூடிய நோய்கள் தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இலகுவாகப் பரவக்கூடும். காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் மலத்துடன் இரத்தம் கசிதல் உள்ளிட்டவை இந்நோய்களுக்கான அறிகுறிகளாகும்.

இந்நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் விரைவாகப் பரவினால் அது வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம். குளிர் காலம் காரணமாகக் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles